பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை - ஏற்பாடுகள் மும்முரம் : தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

243 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் 65.09 சதவீத வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற  122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்டங்களிலும் 66.91 சதவீதம் பதிவான வாக்குகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 9.62 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு நாளையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக பீகார் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 57 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் மின் தளத்தில் தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பகல் 12 மணிக்கு பீகார் மாநிலத்தில் அடுத்த ஆட்சியமைக்கப் போவது தேசிய ஜனநாயக் கூட்டணியா மகாகத்பந்தன் கூட்டணியா என்பது தெரிந்துவிடும். 

Night
Day