தஞ்சாவூர் : 753 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - 6 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 753 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஆறு பேரை கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் முக்கூட்டு சாலையில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். கடைக்கு பின்புறம் இருந்த குடோனின் 136 கிலோ ஹான்ஸ், 41 கிலோ கூல் லீப்பை போலீசார் கைப்பற்றி திருநாவுக்கரசு, மகேந்திரன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 129 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து அப்துல்லா என்பரை கைது செய்தனர். மேலும், நாஞ்சிக்கோட்டை பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 447 கிலோ போதை பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டு காமராஜ், சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day