சிவகங்கையில் காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சிட்டம்பட்டியை சேர்ந்த தஷ்வந்த் என்பவர் தனது மனைவி சத்யா மற்றும் 2 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் அனஞ்சியூர் பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு பங்கேற்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இவர்களுடன் சத்யாவின் சகோதரி சோனை ஈஸ்வர் என்பவரும் பயணம் செய்தார். சாக்குடி அருகே சென்ற போது எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சோனை ஈஸ்வரி படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவரின் உடலை எடுக்க விடாமல், போலீஸ் வாகன ஓட்டுநரை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day