மா.சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்ட பினாயில் வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வந்த திமுக அமைச்சர்களுக்கு முன்பு "பினாயில்" ஊற்றியபடி ஊழியர்கள் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகி உள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் டெக்ஸா ஸ்கேன் கருவியை தொடங்கி வைப்பதற்காக திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அமைச்சர்களின் வருகைக்காக மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் பம்பரமாய் சுழன்று மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தினர். மேலும் அமைச்சர்கள் வரும் போது நோயாளிகளோ, பொதுமக்களோ எதிரே வராதவாறு தடுத்து நிறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி அமைச்சர்கள் வருகை தந்தபோது பகுதி அவர்களுக்கு முன்பு பினாயிலை பணியாளர்கள் தெளித்து கொண்டே சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பல்வேறு தரப்பினரின் கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. இப்படியொரு வரவேற்பை இதுவரை பார்த்ததில்லை என நெட்டிசன்கள் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். 

Night
Day