டெல்லி கார் வெடிப்பு - பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பூடான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய உடன் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் கார் வெடிப்பு சம்பவம் குறித்தான விசாரணையின் நிலை மற்றும் குற்றப்பின்னணி குறித்து பிரதமர் மோடி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. டெல்லி மற்றும் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 

Night
Day