நடைமேடைக்கும், ரயிலுக்குமான இடைவெளியை நீக்கக்கோரி வழக்கு - இந்திய ரயில்வே வாரியம் பதிலளிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கி மெட்ரோ ரயில் நிலையம் போன்று அமைக்க உத்தரவிட கோரிa வழக்கில் இந்திய ரயில்வே வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ரயில் மேடைகளில் சிக்கி இதுவரை 39 ஆயிரத்து 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எனவே மெட்ரோ ரயில் நிலைய நடை மேடையை போன்று சாதாரண ரயில் நிலையங்களில் நடைமேடையின் இடைவெளியை குறைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்தியன் ரயில்வே வாரியத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி அமர்வு இது தொடர்பாக ரயில்வே வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

Night
Day