முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக தனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, பொய்யான குற்றச்சாட்டை முதலமைச்சர் ஸ்டாலின், முன்வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளர். தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் பொது வெளியில் முன்வைத்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, இந்த கருத்துக்கு தான் எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

varient
Night
Day