மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்கக்கவசம் தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு அணிவித்து வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த நாள், தேவர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது  பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழா, வருகின்ற 30ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கிய 13.5 கிலோ எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்ட கவசம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் நினைவிடத்தின் மேல் அமைக்கப்பட்ட 3 அடி உயரம் கொண்ட அவரது திருஉருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

மதுரையில் உள்ள வங்கியிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேவர் நினைவாலய பொருப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அவர்களின் தலைமையில் எடுத்துவரபட்ட தங்கக் கவசம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருமகனார் திருஉருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

Night
Day