மனித குலத்தின் மகத்துவம் காதல்... உலக காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

"உங்கள் அருகில் ஒரு பெண் சிரித்து மகிழ்ச்சியாக சுதந்திரமாக உணர்ந்தால், நீங்கள் தான் உலகின் மிக அழகான ஆண்"  என்ற வரிகளுக்கு ஏற்ப, காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  ஏன் நாம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுகிறோம், அதன் வரலாறு, முக்கியத்துவம் என்ன என்பது பற்றிய சில உண்மைகள் பற்றி இதில் தெரிந்திக்கொள்வோம்...

காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டேவை தொடர்ந்து தான் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 

தங்களின் கிரஷ்கள், காதலர்கள், இணையர்களுக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும், காதலர் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். சிலர் காதலர் தினத்தை ஒரு சுய-காதல் நாளாகக் குறிப்பிட்டு, சுய-கவனிப்பில் ஈடுபடுவதன் மூலமோ அல்லது தாங்கள் விரும்பும் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமோ தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 

நீங்கள் தனிமையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், காதலர் தினம் என்பது காதலில் இருப்பதும், காதலைக் கொண்டாடுவதும் தான்.

வேலன்டைன்ஸ் டே என்ற தினம் புனித வேலன்டைன்ஸ் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. ரோமன் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான லுபேர்களியா பிப்ரவரி மாதத்தின் நடுவில் கொண்டாடப்படும். வசந்த காலத்தை வரவேற்கவும் கல்யாணமான ஜோடிகள் தங்களுக்கு குழந்தை தரிக்கவும் கொண்டாடும் பண்டிகை என கூறப்படுகிறது.

அப்போது, பிப்ரவரி மாதம் ஒரு காதல் மாதமாகவே கடைபிடிக்கப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் போப் முதலாம் கேளாசியஸ் இதற்கு வேலண்டைன்ஸ் டே என்று பெயர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு வரலாறோ, ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவேதான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்த வைத்துள்ளார். இந்த விஷயம் மன்னனுக்கு தெரியவந்தபோது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அற்புதமான காதலர் தினத்தின் காதலன், காதலிக்கு கொடுக்கும் பரிசுகள் அவர்களுக்கு சந்தோஷத்தை தான் தர வேண்டுமே தவிர, அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்துவிடும் அளவில் இருந்துவிடக்கூடாது. இப்போது காதலர் தினத்துக்கு தனது துணைக்கு எந்த மாதிரியான பரிசை கொடுக்கலாம் என பலர் யோசித்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்காகவே திருச்சியில் உள்ள கிப்ட் ஷாப்களில், குவிக்கப்பட்டுள்ள கிரீட்டிங் கார்டுகள் மற்றும் காதலர்தின பரிசுப்பொருட்களை ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நண்பர்களுக்கும், காதலர்களுக்கும் வாங்கிச்சென்றனர். இதுமட்டுமன்றி பூக்களையும், பூச்செடிகளையும் பரிசளிக்கவும் அவர்கள் ஆர்வம்காட்டினர்.

அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம் என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப காதலர்கள் தங்களது காதலை கொண்டாடி வருகின்றனா்..

வாழும் வாழ்க்கையை அழகாக அனுபவித்து வாழ வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியும் காதலோடு வாழுங்கள். காதல் என்பது உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது. வாழ்க்கையில் காதல் இருந்தால் வாழ்வு ருசிக்கும். காதலின் சுகம் மிகவும் அலாதியானது. இரு மனம் சேர்ந்தது மட்டும் காதல் இல்லை, உணர்ச்சிகள் நிறைந்த இதயங்களின் ஓசை தான் காதல்.

உலகை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் அனைத்து  காதலர்களுக்கும் காதலர் தினம் வாழ்த்துக்கள்....

Night
Day