தேர்தல் பத்திரங்கள் வழக்கு - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. 2018 ஜனவரி 2-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின்படி, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இதனால் தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி தொடரப்பட்ட மனுக்களை 6 ஆண்டுகளாக அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day