மத்திய-அமைச்சர்-அமித்ஷாவை-சந்திக்க-பாமக-நிறுவனர்-ராமதாஸ்-திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பாமகவில் உள்கட்சி மோதல் வெடித்த நிலையில் பொதுக்குழுவை கூட்டிய ராமதாஸ் தன்னை அக்கட்சியின் தலைவராக அறிவித்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு அவரை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து கடிதம் அனுப்பியது. இதனை ராமதாஸ் தரப்பினர் ஏற்காத நிலையில், அன்புமணிக்கு பாஜக ஆதரவு இருப்பதால், தற்போது பிரதமர் அமித்ஷாவை சந்திக்க ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day