தமிழகம்
மே.16ஆம் தேதி 10, +1 தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாட்டில் பத்து மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை ?...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பொது மயானத்தில் குப்பை கொட்ட வந்த ஊழியர்களை மயான வளாகத்திற்குள் வைத்து பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள பொது மயானம் அருகே குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் கட்டடம் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது. நகராட்சி ஊழியர்கள் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்ட வந்த ஊழியர்களை சிறை பிடித்து மயான வளாகத்திற்குள் வைத்து பூட்டினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் குப்பை கொட்ட மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் ஊழியர்களை விடுவித்தனர்.
தமிழ்நாட்டில் பத்து மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை ?...
குழந்தை பேறுக்கு பரிகார பூஜை - மோசடிமாந்திரீக பூஜை செய்தால் உங்களுக்கு கு?...