பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது என்பதற்கு பதிலாக கொண்டுவரப்படும் என உளறிய முதல்வர் ஸ்டாலின்

எழுத்தின் அளவு: அ+ அ-

 திமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது என்பதற்கு பதிலாக கொண்டுவரப்படும் என உளறியது கேலிக்கூத்தாக அமைந்தது.

நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையை வாசித்தார்.

அப்போது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது என்பதற்கு பதிலாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என உளறியது கேலிகூத்தாக அமைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த உதயநிதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் சுதாரித்துக் கொண்டு மு.க. ஸ்டாலின் அருகே ஓடிவந்து தவறை கூட்டிக்காட்டினர். இதனையடுத்து தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது என மு.க.ஸ்டாலின் வாசித்தார்.

தேர்தல் அறிக்கையை பார்த்து படித்த போதே மு.க.ஸ்டாலின் உளறியதால், கூட்டத்தில் இருந்த திமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியும், சலசலப்பும் ஏற்பட்டது.


Night
Day