புரட்சித்தாய் சின்னம்மா மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பகவான் மகாவீரர் பிறந்தநாளை கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்‍கும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன நிறைவோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பகவான் மகாவீரர் இளமையிலேயே தனது சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கைச் சக்திகளோடு தனது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்று அற்ற நிலையைக் கடைபிடித்து வாழ்ந்தவர் என்றும் அவரது வாழ்க்கையே அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு அறநெறியினையும் ஆன்மிக நெறியினையும் தவறாது பின்பற்றியவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல், அமைதியான வாழ்வினை வாழ்ந்து வந்தாலே நம் அனைவருடைய வாழ்விலும் நிச்சயம் வெற்றியடையமுடியும் என புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். 

பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது நெஞ்சார்ந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day