தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே ஆதிதிராவிடர் காலனியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருவாண்டான் தெருவில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர், கலங்கலாக வந்ததை அடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தபோது, அதில் மாட்டுசாணம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இதனிடையே அந்த குடிநீரை குடித்த அப்பகுதி மக்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற அதிகாரிகள், நீர்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் மற்றும் அசுத்தத்தத்தை ஆய்வுக்காக எடுத்து சென்றதுடன், மாட்டுசாணம் கலந்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் மீண்டும் அரங்கேறிய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...