பீகார் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பீகார் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களுக்கு மேலாக தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்புநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு வெற்றி சான்று என தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் அமோக வெற்றியை தொடர்ந்து  தமிழகத்திலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். 

இதனிடையே பீகார் சட்டபேரவை முடிவுகள் மிக தெளிவான முடிவை காட்டுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், ஐந்து மாநில தேர்தலுக்கு பீகாரின் வெற்றி முன்மாதிரியாக இருக்கும் என்றும் வழக்கமான வாக்கு சதவீதத்தை விட இம்முறை வாக்கு சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மீது பெண்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


Night
Day