பிரச்சார வேனில் ஏறிய திமுக தொண்டரை தாக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே தேர்தல் பிரசார வேனில் ஏறிய திமுக தொண்டரை அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கிய சம்பவம் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரசார வேனில் ஏற முயன்ற திமுக தொண்டரை, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓங்கி அடித்து கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசலில் சிக்கி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. 

Night
Day