பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவைப் போற்றுவோம்! புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்துச் செய்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளான இன்று அவர் தம் நினைவைப் போற்றுவோம் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா. ராமச்சந்திர ஆதித்தனாரின் 91-வது பிறந்த நாளான இன்று அவர் தம் நினைவைப் போற்றுவோம் என்று கூறியுள்ளார். ராமச்சந்திர ஆதித்தனார் தமிழகத்தின் நலனிற்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய பணிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் இந்நாளில் நினைவு கூறுவோம் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day