பாரம் தாங்காமல் பேப்பர் ரோல் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே பாரம் தாங்காமல் பேப்பர் ரோல் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
சத்தியமங்கலத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேப்பர் ரோல் ஏற்றி கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே வந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் மரிய சந்தியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day