ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை வழிமறித்ததால் பரபரப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை ஒன்று வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்த்தட்ட பள்ளம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது, ஓட்டுநர் பேருந்தை சாதுரியமாக இயக்கிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான, வீடியோ காட்சிகள் வெளியான நிலையில்,  யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day