கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம்... கண்டுகொள்ளாத காவல்துறை..

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கள்ள சந்தையில் பெண் ஒருவர் மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. வி கோட்டா சாலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவையும் பொருட்படுத்தாமல் திவ்யா என்ற பெண்  மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளசந்தையில் நடைபெறும் மது விற்பனையை பேரணாம்பட்டு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசார் கண்டுகொள்ளாமல்  இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day