எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில் யார் பெரிய ஆள்? என்பது தொடர்பாக இரு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளிடையே நடைபெற்ற மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாவில் குழு தொடங்கியுள்ளனர். இதேபோன்று, 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இன்ஸ்டாகிராமில் குழு சேர்ந்து பதிவுகளை போட்டு வந்துள்ளனர். இதில் நாங்கள் தான் பெரியஆள் என்ற தொனியில் இரு பள்ளி மாணவிகளும் பதிவுகளை போட்டு வந்ததால் சமூகவலைதளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இன்ஸ்டாவில் வார்த்தை மோதல் முற்றியநிலையில், ஆத்திரமடைந்த ஒருதரப்பு பள்ளி மாணவிகள் 10 கிலோமீட்டர் பயணம் செய்து மறுதரப்பு பள்ளி மாணவிகளிடம் நேரில் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளி நிர்வாகங்கள் மற்றும் போலீசார் தகராறில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.