பணப்பட்டுவாடா - சென்னையில் வருமானவரித்துறை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஏழுகிணறில் உள்ள இன்துராம் சௌத்ரி என்பவர் வீட்டில் அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பணப் பட்டுவாடாவை தடுக்க சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏழுகிணறில் உள்ள பைனான்சியர் இன்துராம் சௌத்ரி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணப்பரிவர்த்தனை, பண பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day