தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். முதியோர் இல்லம் சார்பில் வழங்கப்பட்ட இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி முதியோர்கள் மகிழ்ந்தனர். வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது போல் இங்கும் கொண்டாடுவதாகவும், இவை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதியோர்கள் தெரிவித்தனர்.


தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முதியவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், முதியவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இதேபோன்று மற்றொருதொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த முதியவர்களுக்கு அசிரி, சேலை, மாளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

x

Night
Day