பட்டாக்‍கத்திகளுடன் ரீல்ஸ் போட்ட 4 இளைஞர்கள் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டா கத்திகளுடன் ரீல்ஸ் போட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டனர்.

மானாமதுரை அருகே உள்ள முருகபஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், முகமது பயாஸ் அசான், பாலமுருகன்,ஆகாஷ் என்ற நான்கு இளைஞர்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு ரீல்ஸ் போட்டுள்ளனர். அதில், சிவகங்கை பதறணும்; சிவகங்கை எல்லாமே நாங்க தான், என்ற வசனங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டு உள்ளனர். இந்த ரீல்ஸ் வைரலானதை தொடர்ந்து மானாமதுரை காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

Night
Day