சிறை கைதிகளுக்‍கு மாதம் இரு முறை நீதிபோதனை வகுப்பு நடத்த திட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாதம்தோறும் இரண்டு சனிக்‍கிழமைகளில் சிறை  கைதிகளுக்கு பக்தி, நீதி போதனை வகுப்பு நடத்தவும், சிறைகளில் பக்தி, நீதி போதனை புத்தகங்கள் அடங்கிய நூலகம் அமைக்‍கவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, தவறு செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மனநிலையில் மாற்றங்களை கொண்டு வர வசதியாக நீதி போதனை வகுப்புகளை நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் என்று பெயர் சூட்ட கோரி மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளதாக பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.

Night
Day