பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் யூ-டர்ன் - டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கிய ஏர்இந்திய விமானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக டெல்லியிலிருந்து பாலிக்கு சென்ற ஏர் இந்திய விமானம் நடுவானில் திருப்பி அனுப்பட்டது. கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த எரிமலை நேற்று வெடித்து சிதறியது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாம்பல் மேகமாக காட்சியளித்தன. இதையடுத்து பாலிக்கு செல்லவிருந்த சர்வதேச விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் டெல்லியிலிருந்து பாலிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ஏர் இந்திய விமானம் பயணிகளுடன் பாதுகாப்பாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியது.  அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Night
Day