மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அட்ராசிட்டியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடியில் மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வியாசர்பாடி போலீசார் வழக்கு செய்தனர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் ரூட் தலைவர்களாக செயல்பபட்டு, அவர்கள் வரும் பேருந்துகளில் கூரை மீது அமர்ந்து அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். அதில்  வியாசர்பாடியில்  மாநகர பேருந்து மேற்கூரையில் ஏறி  அட்ராசிட்டியில்  ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி இணையங்களில் வைரலானது. இதனை அடுத்து மாநகர பேருந்து நடத்துனர் ஹேமந்த் குமார் அளித்த புகாரின் பேரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வியாசர்பாடி போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், போக்குவரத்து சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Night
Day