நீர்நிலை ஆக்கிரமிப்பு - மாநகராட்சிக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்வாரிய தலைவர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Night
Day