தேனி: வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து பழங்கு​டியினர் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்‍கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனை வழங்காததை கண்டித்து சோற்றுப்பாறை அணை பகுதியில் பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மலை கிராமங்களான கரும்பாறை, குறவன் குழி கிராமங்களை சேர்ந்த 37 ஆதிவாசி பழங்குடியின மக்‍கள் சோத்துப்பாறை அணை பகுதியில் குடிசையிட்டு வாழ்ந்து வருகின்றனர். அரசு இலவச வீட்டு மனைகளை வழங்கக்‍ கோரி கடந்த 19 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயனில்லாததால் இன்று சோத்துப்பாறை அணை பகுதிக்கு மேல் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிகள் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர்  விரைவில் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

varient
Night
Day