தேசிய அளவில் 'Project Competition INNOVENTIA 2025' போட்டி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான Project Competition INNOVENTIA 2025 போட்டி நடைபெற்றது.


செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் பாபு மனோகரன், மேலாண்மை இயக்குநர் சசி சேகர், நிர்வாக இயக்குநர் ஜெஸ்ஸி பிரியா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் இப்போட்டியை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆய்வு திட்டங்களையும், மாதிரிகளையும் காட்சிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிநகழ்ச்சியில் இந்திய காப்புரிமை மற்றும் வணிக அமைப்புகளின் இணை கட்டுப்பாட்டாளர் பாலமுருகன், IEI அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

varient
Night
Day