தகாத உறவால் நேர்ந்த விபரீதம் - விஷம் குடித்து ஜோடி தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் முன்பு தகாத உறவில் இருந்த ஜோடி காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தங்கம். லாரி ஓட்டுநரான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சுப்பையா - பார்வதி தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  தங்கம், பார்வதி இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இருவரின் வீட்டிற்கும் தெரியவந்த நிலையில் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே ஜோடி, குலசேகரன்பட்டினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து உயிர் பயத்தில் அங்குள்ள காவல்நிலையம் முன் காரினை நிறுத்திவிட்டு காருக்குள் இருந்தபடி காப்பாற்றக்கோரி சத்தமிட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.  இதையடுத்து இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டிணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day