எழுத்தின் அளவு: அ+ அ- அ
வாக்கு திருட்டு தொடர்பான ஹைட்ரஜன் குண்டு வெளிவர இருப்பதாக எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நினைவு அரங்கத்தின் திறப்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்த அவர், வாக்கு திருட்டு தொடர்பாக அண்மையில் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது அப்பட்டமான உண்மை என்று கூறினார். வாக்கு திருட்டு தொடர்பாக கர்நாடகாவில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறிய ராகுல் காந்தி, இது தொடர்பாக கர்நாடகா சிஐடி கேட்டுள்ள தகவல்களை தலைமை தேர்தல் ஆணையைர் ஞானேஷ் குமார் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றார் என்பதை இந்தியாவில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத வகையில் வெளிப்படுத்துவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு வெளிவர இருப்பதாக கூறிய அவர், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.