குஜராத் சென்றார் மோடி - ரூ.34,200 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் ஆற்றலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததால், சுதந்திரம் அடைந்த பின்னரும் நாடு தகுதியான வெற்றியை பெறவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் பாவ்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த பிரதமர் மோடி சாலைப் பேரணியில் பங்கேற்றார். அங்கு தேசிய கொடிகளுடன் திரண்டிருந்த மக்களும் பாஜக தொண்டர்களும் மலர்களை தூவி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து, சமுத்ரா சே சம்ரித்தி அதாவது கடலிலிருந்து செழிப்பு என்ற திட்டம் தொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த திட்டத்தை துவங்கி வைத்த அவர், 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து அடிக்கல்லும் நாட்டினார். 

பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியா தற்சாற்பு நாடாக வேண்டும், உலகத்தின் முன் வலுவாக நிற்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் திறனுக்கும் பஞ்சமில்லை என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து ஆற்றலையும் புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார். இதனால் சுதந்திரம் அடைந்து 60 முதல் 70ஆண்கள் ஆன பிறகும் இந்தியா அதற்குத் தகுதியான வெற்றியை அடையவில்லை என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார். காங்கிரஸ் அரசின் கொள்கைகள் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்ததாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசின் கொள்கைகள் இந்தியாவின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துவதைத் தடுத்தாக கூறினார். 

உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை என்றும் நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளை சார்ந்திருப்பதுதான் என்றும் கூறிய பிரதமர் மோடி, அந்நிய சார்பு அதிகமாக இருந்தால், நாட்டின் தோல்வி அதிகமாகும் என்று தெரிவித்தார். மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Night
Day