ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம் - சின்னம்மாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் கழகம் ஒன்றிணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என திரளான கழகத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அஇஅதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனும், கழகத்திலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அஇஅதிமுக ஒன்றிணைய தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கழக ஒற்றுமையை வலியுறுத்தி கழகத் தொண்டர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையத்தில் உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் இல்லத்திற்கு 500க்கும் அதிகமான கழகத்தினர் சென்று கழகம் ஒன்றிணைய வேண்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Night
Day