ஈரான் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


ஈரானில் வேலை தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து, பல இந்தியர்களை மோசடி கும்பல் ஏமாற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அழைத்துச் செல்லப்படுபவர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்படுவதாகவும், கடத்தப்பட்ட இந்தியர்கள் குடும்பத்தினரிடம் மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஈரானுக்கு விசா இல்லாத நுழைவை உறுதியளிக்கும் எந்தவொரு முகவரும் குற்றக் கும்பல்களுடன் உடந்தையாக இருக்கலாம் என்பதால், பொய்யான வாக்குறுதிகளுக்கு இந்தியர்கள் யாரும் இரையாக கூடாது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Night
Day