ராணுவத்திலிருந்து விடைபெறுகிறது மிக்-21 ரக விமானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விமானப்படையில் 60 ஆண்டு காலம் சேவையாற்றிய மிக்-21 ரக போர் விமானம் வரும் 26ம் தேதியுடன் விடை பெறுகிறது. 

1963ம் ஆண்டு இந்திய விமானப் படை போர் விமானமான மிக்-21, சுமார் 60 ஆண்டுகளாக ராணுவத்திற்கு தனது பங்களிப்பை அளித்து வந்தது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போர் உள்பட பல போர்களில் மிக்-21 ரக போர் விமானம் முக்கிய பங்காற்றியது. கார்கில் போரிலும் மிக்-21 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. நமது உள்நாட்டு விண்வெளித்துறையின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி திறன்களின் வளர்ச்சிக்கும் மிக்-21 வழிவகுத்தது. இத்தகையை சிறப்பு கொண்ட மிக்-21 போர் விமான சேவையை வரும் 26ம் தி படிப்படியாக நிறுத்த விமானப்படை முடிவு செய்துள்ளது. இதற்குப் பதிலாக தேஜாஸ் இலகு ரக போர் விமானமான மார்க் 1ஏ-வை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Night
Day