டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் விவகாரத்தில், ஆளும் பாஜகவை, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஒரு வருடத்தில் பள்ளிகளுக்கு பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டும், இதுவரை யாரும் பிடிபடவில்லை என்று கூறியுள்ளார். டெல்லியில் பள்ளிகளுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பீதி நிலவுவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நான்கு என்ஜின்களை கொண்ட டெல்லி பாஜக அரசால் தலைநகரின் பாதுகாப்பைக் கூட நிர்வகிக்க முடியவில்லை என்றும், வெடிகுண்டு மிரட்டல்களுக்க எப்போது முடிவு கட்டப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Night
Day