சேதுக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை கடல் பசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை கடல் பசு மீட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேதுக்கரை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து. அதன் பேரில், வனத்துறையினர் சென்று பார்த்த போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அபூர்வமாக தென்படக்கூடிய கடல்பசு என்றும் 300 கிலோ எடையும் இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய வனத்துறையினர் கால்நடை துறையினர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day