தீபாவளி பண்டிகையையொட்டி, புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையையொட்டி, மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் இல்லத்தில், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஏற்கெனவே நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அங்குள்ள லட்சுமி என்ற மாணவி படிப்பதற்கு தேவையான உதவிகளைச் செய்தார். இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, அன்பகம் இல்லத்தில் தங்கி உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில், கழக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கினர். குழந்தைகளும் பணியாளர்களும் அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். 

varient
Night
Day