திரு. வைகோ பூரணமாக குணமடைய வேண்டுகிறேன் - புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள், விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள், விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் திரு. வைகோ அவர்கள் ஆண்டவன் அருளால் முழுமையாக உடல்நலம் பெற்று தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது நல்வாழ்விற்காகவும் தொடர்ந்து அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஆண்டவனை பிரார்த்திப்பதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day