தமிழகம்
சென்னைக்கு 520 கி.மீ தொலைவில் டிட்வா புயல்
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் நகரு...
திருவள்ளூர் மாவட்டம் அருங்குளம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவாலங்காடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணும்படி கூறியதையடுத்து, காலிக் குடங்களுடன் பெண்கள் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் நகரு...
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்ப?...