திருப்பூர்: நஞ்சராயன் குளத்தில் கலக்‍கும் கழிவு நீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் நகர கழிவு நீர், சாயசலவை பட்டறை கழிவுநீர் சுத்திகரிக்காமல் நேரடியாக கலப்பதால் சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்‍கு பாதிப்பு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. திருப்பூர் அருகே ஊத்துக்குளி வட்டம், சர்க்கார்பெரியபாளையம் பகுதியில் 440 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் இருந்தும், இமயமலையில் இருந்தும், ஆண்டுதோறும், அக்டோபர் முதல் மார்ச் வரை 150 வகையான  அரிய வகை  பறவைகள், வந்து செல்கின்றன. தமிழக அரசு 17-வது சரணாலயமாக, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளத்தை அறிவித்தது. இந்த நிலையில் குளத்திற்குள் கழிவுநீர் செல்வது வேதனையாக உள்ளது என பறவைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Night
Day