பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே மனைவி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் சுண்ணாம்புகாளவாய் அருகே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். 

மரக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் சுண்ணாம்புகாளவாய் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதுக்கரை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் இடித்தாக தெரிகிறது. அப்போது ராபியத்துள் பஷிரியா கீழே விழுந்த போது பேருந்து சக்கரம் தலையில் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த ராபியத்துள் பஷிரியா சம்பவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அவரது கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து போலீசார், ஓட்டுநர் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Night
Day