முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டவாறு போராட்டம் - ஜாக்டோ ஜியோ திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி  கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்  திட்டமிட்டவாறு தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்  நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்தும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இந்த போராட்ட ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது.  இதில் ஜாக்டோ ஜியோவில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தங்கள் கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிவிட்டு மற்றவை பின்னர் நிறைவேற்றப்படும் என்று கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.

Night
Day