திருப்பூர்: தனியார் பள்ளி நிர்வாக குழுவை மாற்ற எதிர்ப்பு - சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி நிர்வாக குழுவை மாற்ற வேண்டாம் என கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமளாபுரம் அருகே செயல்படும் தனியார் பள்ளியில்  3 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அறங்காவலர் குழு செயலாளரான ராமமூர்த்தி என்பவர் பள்ளி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அவருக்‍கும் அறங்காவலர் குழுவில் இருந்து நீக்‍கப்பட்ட  செந்தில்குமாருக்‍கும் இடையே பிரச்னை நிலவுகிறது.  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில்  பள்ளி நிர்வாகத்தை மாற்ற கூடாது என்று கூறி  பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Night
Day