திருச்சி சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் உறையூர் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உறையூரில் உள்ள கீழ புதுபாய்காரதெருவில் வசித்து வரும் சர்தார் என்பவர், பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் லைட்டை போட்டபோது திடீரென்று மின்வயரில் இருந்து தீப்பொறி கிளம்பி சிலிண்டரில் தீப்பற்றியது. சுதாரித்துக் கொண்டு சர்தார் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற சிலிண்டர் வெடித்து சிதறியது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்து முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது.

Night
Day