திமுக கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுகவினர் பிரியாணிக்காக சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட திமுகவினர் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்த பின்பு திமுகவினருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது திமுகவினர் சிலர் டேபிளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட போது, தரையில் அமர்ந்த திமுகவினர் தங்களுக்கும் பிரியாணி வழங்க வேண்டும் என உணவு பரிமாறும் இளைஞர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு முறையாக பிரியாணி பரிமாறாததால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்த இளைஞர்களை பிடித்து சரமாரியாக தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

varient
Night
Day