திண்டுக்கல்: பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு மின்னணு குறுஞ்செய்தி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

varient
Night
Day