தாய்ப்பால் விற்பனை - கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் முத்தையா என்பவர் நடத்தி வரும் புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடையில், சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்ப்பாலுடன் கூடுதலாக கலக்க வைத்திருந்த புரோட்டின் பவுடர்கள் என 200க்கும் மேற்பட்ட பேராசிட்டம் ஊசிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கும் சீல் வைத்தனர். இந்நிலையில், சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Night
Day